Super User / 2010 செப்டெம்பர் 30 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(நவம்)
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வீதிகளில் மழை வெள்ளம் தேங்குவதால் பொது மக்களும் மாணவர்களும் வீதியால் போக்குவரத்து செய்வதில் பெரும் சிரமங்களுக்கும் உள்ளாகி வருகின்றார்கள்.
கடந்த சில நாட்களாக பெய்யும் மழையைத் தொடர்ந்து யாழ். நகரப் பகுதியில் இந்துக்கல்லாரி வீதி, காங்கேசன்துறை வீதி, இந்துக் கல்லூரியைச் சந்திக்கும் சந்தி ஆகிய பகுதிகளில் வெள்ளம் தேங்கிக் கணப்படுகின்றது.
இதன் காரணமாக பொது மக்கள், மாணவர்கள் போக்குவரத்து செய்வதில் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
வெள்ளம் வடிந்தோடுவதற்காக இருந்த வெள்ள வாய்க்கால்கள் மூடப்பட்டுள்ளமையால் இந்த வெள்ளம் ஓட முடியாது வீதியில் தேங்கி நிற்கின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .