Super User / 2010 ஒக்டோபர் 04 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
பருத்தித்துறை, அல்வாய் கிழக்குத் தெருமூடி மடத்தடியில் இன்று காலை இ.போ.ச. பஸ்ஸும் தனியார் பஸ்ஸும் மோதிக்கொண்டதில் இடம்பெற்ற விபத்தில் தனியார் பஸ் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.ச.பஸ்ஸும் பருத்தித்துறைக்குச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மினிபஸ் சாரதியான அல்வாய் கிழக்கைச் சேர்ந்த இ.கபில்ராஜ் என்பவரே படுகாயமடைந்த நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இ.போ.ச. பஸ்ஸில் பயணித்த 7 பேர் சிறு காயங்களுக்கு ஆளாகியமையும் குறிப்பிடத்தக்கது.
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago