Suganthini Ratnam / 2010 நவம்பர் 07 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
பளை பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் அப்பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்த மாநாடு எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு புலோப்பளை றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பாரம்பரியக் கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் வடமாகாண ஆளுநர்.ஜீ.ஏ.சந்திரசிறி, வடமாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி மாவட்ட திணைக்களங்களின் அதிகாரிகள், பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர், இராணுவ அதிகாரிகள் மற்றும் பச்சிலைப் பள்ளிப்பிரதேச பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டின்போது, பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் பிரிவில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த மக்களின் பிரச்சினைகள், தென்னைப் பயிர்ச்செய்கை தொடர்பான விடயங்கள், பிரதேச மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள், பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள், பாதிக்கப்பட்டோருக்கான உதவித்திட்டங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன.
8 minute ago
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
43 minute ago
48 minute ago