Super User / 2010 நவம்பர் 11 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான யோகி, புதுவை இரத்தினதுரை ஆகியோரை விடுதலை செய்ய உதவுமாறு அவர்களின் மனைவிமார் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் இன்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை இன்று யாழ். அரியாலை சரஸ்வதி சனசமூக மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்வாணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்த புதுவை இரத்தினதுரையின் மனைவி, தனது கணவர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் வயோதிபரான அவரின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு அவரை விடுவிக்க வேண்டுமெனவும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுத் தலைவர் யோகரட்ணம் யோகியின் மனைவியும் இன்று நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். தனது கணவர் யோகியை விடுதலை செய்யுமாறு அவரும் வலியுறுத்தினார்.
.jpg)
.jpg)
8 minute ago
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
43 minute ago
48 minute ago