Suganthini Ratnam / 2010 நவம்பர் 12 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
உடுவில் பிரதேச செயலகத்துக்கும் வலி தெற்கு - சுன்னாகம் பிரதேசசபைக்கும் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
உடுவில் பிரதேசசபைக்கான கட்டடப் பணிகள் நிறைவடையும் நிலையிலுள்ளன. நாற்பது மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்தச் செயலகக் கட்டடத்தின் மூன்றாம் கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிரதேச செயலகக் கட்டடங்களை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் நீர்மாணிக்கப்பட்டு வரும் இந்தக் கட்டத்திற்கான மூன்றாம் கட்ட வேலைகளுக்கான நிதியை குவைத் வழங்கியுள்ளது.
இந்த நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும் விரைவில் இந்தச் செயலகக் கட்டடத்தின் திறப்பு விழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வலி தெற்கு - சுன்னாகம் பிரதேசசபைக் கட்டடத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்தக் கட்டடத்துக்கு ஐம்பது மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மூன்று மாடிகளைக் கொண்ட செயலகக் கட்டடமாகும்.
.jpg)
4 minute ago
10 minute ago
45 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
45 minute ago
50 minute ago