2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கொழும்புத்துறை பகுதி கிராம மக்கள் மீள்குடியேற நடவடிக்கை

A.P.Mathan   / 2010 நவம்பர் 16 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். கொழும்புத்துறையிலுள்ள 04 கிராமங்களில் மக்கள் மீளக் குடியமர்வது தொடர்பாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து அவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று அமைச்சரின் யாழ். அலுவலகத்திற்கு வருகைதந்த மக்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து இன்று செவ்வாய்க்கிழமை மக்கள் பிரதிநிதிகளும் கிராம சேவையாளர்களும் பிராந்திய மிதிவெடி செயற்பாட்டு அலுவலகப் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன் பிரகாரம் அந்தப் பகுதியில் மிதிவெடி அபாயம் இருக்கின்றதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், அதன் பின்னரே மக்கள் குடியேற அனுமதிக்க முடியும் எனவும் மிதிவெடி செயற்பாட்டு பிரதிநிதிகள் தெரிவித்த அதேவேளை, அடுத்தாண்டு ஜனவரி மாதம் அம்மக்கள் மீள்குடியேற முடியுமென்றும் அதற்கேற்றவிதத்தில் தமது பணிகளை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.

கொழும்புத்துறையிலுள்ள எழிலூர், உதயபுரம், புனிதபுரம், மகேந்திரபுரம் மற்றும் பாசையூர் கடற்கரைப்பகுதி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மேற்படி மக்கள் 1995ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்து இன்றுவரை உறவினர் வீடுகளில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X