2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தீவகம் வடக்கு மக்களுக்கான குடிநீர்த்திட்டம் இன்று அங்குரார்ப்பணம்

A.P.Mathan   / 2010 நவம்பர் 20 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

ஜனாதிபதியின் இரண்டாவது பதவி ஏற்பையொட்டி தேசிய ரீதியாக இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளின் அடிப்படையில் தீவகம் வடக்கில் மரம் நாட்டும் நிகழ்வும் குடிநீர் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று காலை 9.45 மணியளவில் தீவக வடக்கு புங்குடுதீவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி.யின் புங்குடுதீவு பிரதேச பொறுப்பாளர் நவம் கலந்துகொண்டு நீர்விநியோகத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர் கருணாநிதி, வட இலங்கை சர்வோதய தலைவி பொ.யமுனாதேவி, கிராம அலுவலர் சந்திரா, தேசவள அபிவிருத்தி ஆலோசனை குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X