Menaka Mookandi / 2010 டிசெம்பர் 10 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குடாநாட்டுக் கடற்பகுதிகளில், 'டொல்பின்' மீன்கள் கரையொதுங்கும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன. நேற்று வியாழக்கிழமை ஊர்காவற்றுறை, சுருவிலில் ஆழம் குறைந்த கடல் ஏரிப் பகுதியில் இரண்டு டொல் பின் மீன்கள் கரையொதுங்கியுள்ளன.
இதில் ஒன்று உயிரிழந்த நிலையிலும் மற்றையது குற்றுயிராகவும் மீட்கப்பட்டுள்ளன. அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலுக்குச் சென்ற வேளையிலேயே இந்த டொல்பின் மீன்கள் அவர்களுடைய வலைகளில் மாட்டிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட அந்த மீன்கள் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago