2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி

Super User   / 2010 டிசெம்பர் 13 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (கர்ணன்)

யாழ். பருத்தித்துறை கண்ணைக்கட்டியில் இன்று மாலை இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் பலியானார்.  25 வயதான உதயகுமார் ஆனந்தகுமார் என்பவரே பலியானவர் ஆவார்.

அவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதிலொன்றுடன் மோதியதால் அவர் ஸ்தலத்திலேயே பலியானார். அவ்வேளையில் அவர் தலைகவசம் அணிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பருத்தித்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X