2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் பாரிய குடிநீர்திட்டம்

Super User   / 2010 டிசெம்பர் 14 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

207 கோடி ரூபா செலவில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கான பாரிய குடிநீர் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

இந்த குடிநீர் திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மூன்றரை இலட்சம் மக்கள் நன்மையடையவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கொடிகாமம், சாவக்கச்சேரி, கைதடி, நாவற்குழி, நல்லூர், கோப்பாய், கரவெட்டி, சங்கானை, சண்டிலிப்பாய், காரைநகர், அச்சுவேலி, ஆவரங்கால், பருத்தித்துறை, பளை, வல்வெட்டித்துறை, நெடுந்தீவு, மருதங்கேணி தீவுப்பகுதிகள் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இதன் மூலம் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X