Kogilavani / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
வடக்கில் மீள்குடியேறிவரும் மக்களின் ஒரு பகுதியினர், கடந்த காலங்களில் வழங்கப்பட்டுவந்த மீள்குடியேற்றத்துக்கான உதவித்தொகை 25 ஆயிரம் ரூபா வழங்கப்படாமை குறித்து கவலையடைந்துள்ள நிலையில் நீதிமன்றம் செல்ல போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
போர்ச்சூழல் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த பிரதேசங்களில் மீள்குடியேறுகின்ற போது அவர்களுக்கு இந்த தொகை அப்பகுதி பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டுவந்தது. ஆனால் திடீரென இத்தொகை 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெயர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளதையடுத்து, 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம் பெயர்ந்த மக்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரவித்துள்ளனர்.
இதேவேளை, இவ்விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், அதிகாரிகள் மட்டத்தில் இது நடைமுறைக்கு வராமலுள்ளதா? எனவும் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இவ்விடயம் குறித்து இந்திய தூதுவர் ஆசோக் கே.காந்தா புத்தளத்தில் வைத்து இடம் பெயர்ந்த மக்களை புதிய, பழைய என்ற பிரிவில் நோக்க முடியாது. எல்லோரும் இடம் பெயாந்தவர்களே என்று தெரவித்ததுடன் இந்திய அரசாங்கத்தின் உதவி சகலருக்கும் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் சில அரசார்பற்ற நிறுவனங்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
6 minute ago
35 minute ago
37 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
35 minute ago
37 minute ago
45 minute ago