Kogilavani / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த)
கிளிநொச்சி அம்பாள்குளம் பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான கூட்டம் நேற்று முன்தினம்அம்பாள்குளம் பாடசாலை வளாகப்பகுதியில் நடைபெற்றது.
போரினால் பாதிக்கப்பட்ட இப் பாடசாலையை மீளவும் ஆரம்பிக்க வேண்டும் என பிரதேச மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரிடம் விடுத்தனர். இதனையடுத்து இப்பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பான கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கிளிநொச்சி கல்வி வலயப் பணிப்பாளர் த.குருகுலராஜா, பாடசாலையின் அதிபர் திருமதி ஜெயலட்சுமி, ஆசிரியர்கள், கனகபுரம் மகா வித்தியாலய பிரதி அதிபர் சேதுபதி, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கிருஸ்ணசாமி மற்றும் பெற்றோர் பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் புனரமைப்புப் பணிகளை விரைவில் நிறைவுசெய்து அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
56 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
7 hours ago