Super User / 2010 டிசெம்பர் 22 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.குடாநாட்டில் தங்க நகைகள் கொள்ளையிடப்படும் சம்பவங்களைத் தொடர்ந்து அவற்றைப் பாதுகாப்பதற்கு வங்கிப் பாதுகாப்புப் பெட்டகங்களைப் பெறுவதில் தாம் பலத்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் எனப் பொதுமக்கள் கூறுகின்றனர்.
அரச வங்கிகளில் பாதுகாப்புப் பெட்டகம் தொடர்பில் உயர்வான காப்புறுதிக் கட்டணம் கோரப்படுவதால் பொதுமக்களால் இதனை வழங்க முடியாமல் உள்ளதாக வங்கி வட்டாரங்கள் கூறப்படுகின்றது.
தனியார் வங்கிகள் சில லட்சம் ரூபா பணத்தைச் சேமிப்பு அல்லது நிலையான வைப்பில் வைத்து வருடாந்தக் கட்டணமும் செலுத்தினால் மட்டுமே பாதுகாப்புப் பெட்டகம் வழங்க முடியுமெனக் கூறுகின்றன.
சாதாரண மக்கள் தமது சிறு சிறு சேமிப்பின் மூலமும், உற்றாரின் அன்பளிப்புக்கள் மூலமும் நீண்ட கால முயற்சியில் தேடிய தங்க நகைகளைப் பாதுகாக்க இவ்வளவு தொகைப் பணத்திற்கு எங்கே போவதெனக் கேள்வி எழுப்புகின்றனர்.
தங்க நகைகளைப் போட்டி போட்டுக் கொண்டு அடகு பிடிக்கும் வங்கிகள் அவற்றைப் பாதுகாக்கும் முறையை ஒத்ததாகப் பாதுகாப்புப் பெட்டகங்களை வழங்கும் நடைமுறை ஒன்றைப் பின்பற்ற வேண்டுமெனப் பொதுமக்கள் கோருகின்றனர்.
புதிது புதிதாக வங்கிக்கிளைகளும், சேவை நீடிப்புக்கரும பீடங்களும் பல இடங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றின் மூலம் வணிகர்கள், பொதுமக்களின் வைப்புக் கள் பெருமளவில் திரட்டப்படுகின்றன.
இதேயளவு நாட்டத்தைப் பொதுமக்களின் தேவைகளுக்கு உதவுவதிலும் வங்கிகள் கடைப் பிடிக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
தங்க நகைகளில் சேமிக் கும் பழக்கத்தை நீண்ட கால மாகவே கொண்டுள்ள யாழ்ப்பாண மக்கள், தற்போதைய சூழ்நிலையில் குறைந்தளவு நிபந்தனைகளுடன் பாதுகாப்புப் பெட்டகங்களை வங்கிகள் வழங்க வேண்டுமென எதிர்பார்க்கினறனர்.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago