2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அபராதம் செலுத்தாமல் தலைமறைவான பெண்ணுக்கு ஒன்பது மாத கடூழியச் சிறை

Super User   / 2010 டிசெம்பர் 22 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையை செலுத்தாமல் தலைமறைவாகிய பெண்ணொருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை  நீதிமன்றில் நேற்று ஆஜர் செய்யப்பட்ட போது அவருக்கு 9 மாத கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அல்வாய் வடக்கில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காக ஏற்கனவே கைது செய்யப்பட்ட இப் பெண் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். இவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு 75 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.

இந்நிலையில் 50 ஆயிரம் ரூபாவைச் செலுத்திய இப் பெண், மிகுதி 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்துவதற்கு தவணை வழங்குமாறு மன்றில் விடுத்த கோரிக்கைக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்தத் தவணையில் பணத்தைச் செலுத்தாமல் இவர் தலைமறைவானார். இவரைக் கைது செய்யுமாறு நீதிமன்று பொலிஸாருக்கு பிடியாணை வழங்கியது.

இதனைத் தொடர்ந்து தேடுதல் நடத்திய பருத்தித்துறைப் பொலிஸார் இவரைக் கைது செய்து நேற்று புதன்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இவரது வழக்கை விசாரணை செய்த பருதித்தித்துறை மாவட்ட நீதிமன்ற நீதிபதி திருமதி ஜோர்ஜ் மகிழ் மகாதேவா, இவருக்கு 9 மாதங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X