2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தேசிய பாதுகாப்புத் தினம் யாழ்ப்பாணத்தில் ; பிரதமர் பிரதம அதிதி

Super User   / 2010 டிசெம்பர் 23 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நபீலா ஹுஸைன்)

சுனாமி அனர்த்தத்தை நினைவுகூரும் முகமாக அனுஷ்டிக்கப்படும் தேசிய பாதுகாப்புத் தின நிகழ்வுகள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரதமர் டி.எம். ஜயரட்ன பிரதம அதிதியாக கலந்துகொள்வார் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று தெரிவித்தது.

உத்தியோகபூர்வ தேசிய பாதுகாப்புத் தின நிகழ்வுகள் வடக்கில் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும்.  யுத்தத்தின்போது உயிரிழந்த படையினரும் நினைவுகூரப்படுவர் என மேற்படி நிலையம் தெரிவித்துள்ளது.

சுனாமியால் உயிரிழந்தோருக்காக 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.25 முதல் 9.27 மணி வரை 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்தஅமரவீர நாட்டு மக்களை கோரியுள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்டோருக்கு சுயதொழில்களுக்கான உபகரணங்களும்  பாடசாலை சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்படும் எனவும் அவர்கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X