Menaka Mookandi / 2010 டிசெம்பர் 23 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றுள்ள சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிச்சயம் அரசியல் தீர்வு காணக்கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
எனவே எமது மக்களுக்கான அரசியல் தீர்வுக்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் என்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டார்.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் யாழ். கிளைக்கான புதிய கட்டிடத் திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்படி கோரிக்கையினை முன்வைத்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், 'யாழ்ப்பாணத்தில் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தனது பழைய இடத்தில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ள இன்றைய நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக உள்ளது.
இந்தத் தாபனம் கடந்த காலங்களில் தனது பல்வேறு பணிகளைச் செய்துள்ள காரணத்தினால்தான் மக்கள் தொடர்ந்தும் இந்த தாபனம் மீது நம்பிக்கை வைத்து தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்' என்றார்.
.jpg)
இந்நிகழ்வில் கலந்துகொண்ட யாழ் மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கருத்து தெரிவிக்கையில், 'மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் அரச பணியாளர்கள் கடமையுணர்வுடனும் சேவை மனப்பான்மையுடனும் பணியாற்ற வேண்டும்' என்றார்.
அத்துடன் 'மிகவும் கஸ்டமான சூழ்நிலைகளில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தனது சேவைகளை நல்ல முறையில் செய்து வந்துள்ளது. ஆசியாவின் அதிசயம் மிக்க நாடாக இலங்கையை மாற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் எண்ணத்திற்கு நாம் ஒவ்வொருவரும் செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.
அந்த வகையில் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் அரச பணியாளர்கள் கடமை உணர்வுடனும் சேவை மனப்பான்மையுடனும் பணியாற்ற வேண்டும். அவ்வாறு பணியாற்றும் பட்சத்திலேயே எமது மக்கள் ஓர் உயர்வான நிலையை அடைய முடியும்.
இன்று ஒரு அமைதியான சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதனைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் அதுமட்டுமல்லாமல் இக்காலப் பகுதியில் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் ஒன்றுபட்டு உழைப்போம்' என்றும் கேட்டுக் கொண்டார்.
.jpg)
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் யாழ் பிராந்திய பொதுமுகாமையாளர் திருமதி ராணி அரியநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சர்மதத் தலைவர்களின் ஆசியுரைகள் இடம்பெற்றது.
உதவிப்பொது முகாமையாளர் நிலங்க விக்கிரமசிங்க, யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளரும் மொகான் டி அல்விஸ் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் யாழ் மாவட்டத்திற்கான தனது சேவையினை கடந்த 49 ஆண்டுகளாக ஆற்றி வருகின்றது. நாடெங்கிலும் 130 கிளைகளுடன் இயங்கி வரும் இத்தாபனம் கடந்த கால யுத்த சூழ்நிலையால் 1995ஆம் ஆண்டு முதல் 2010 வரையான காலப்பகுதியில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தின் ஒரு பகுதியில் இங்கி வந்த நிலையில் இதன் பழைய இடமான இல 571 ஆஸ்பத்திரி வீதியில் மீண்டும் தனது சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் இறுதியில் பொதுக் காப்புறுதி நடவடிக்கை ஆகியவற்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உள்ளிட்டோர் தொடக்கி வைத்ததுடன், வன்னியில் போரின் போது சேதமான வாகனங்களுக்கான இழப்பீட்டுக் காசேலைகளும் வழங்கப்பட்டன.



1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago