Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 24 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் அரச பணியாளர்கள் கடமையுணர்வுடனும் சேவை மனப்பான்மையுடனும் பணியாற்ற வேண்டுமென யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் யாழ். கிளைக்கான புதிய கட்டடத் திறப்பு விழாவில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மிகக் கஷ்டமான சூழ்நிலையிலும் கூட, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தனது சேவைகளை நல்ல முறையில் செய்து வந்தது.
ஆசியாவின் அதிசயம் மிக்க நாடாக இலங்கையை மாற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணத்திற்கு நாம் ஒவ்வொருவரும் செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிறந்த தலைமைத்துவத்துடனும் வழிகாட்டலுடனும் மக்களது வாழ்வாதாரத் திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.
அந்த வகையில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் அரச பணியாளர்கள் கடமை உணர்வுடனும் சேவை மனப்பான்மையுடனும் பணியாற்ற வேண்டும். அவ்வாறு பணியாற்றும் பட்சத்திலேயே எமது மக்கள் ஓர் உயர்வான நிலையை அடைய முடியும்.
இன்று ஒரு அமைதியான சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதனைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் அதுமட்டுமல்லாமல் இக்காலப் பகுதியில் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் ஒன்றுபட்டு உழைப்போம் என்றும் கேட்டுக் கொண்டார்.
.jpg)
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025