A.P.Mathan / 2010 டிசெம்பர் 24 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
சக மனிதனை மதித்து அவனது தேவைகளை உணர்ந்து அவனுக்கு உதவும் பட்சத்திலேயே மனித வாழ்வு முழுமை பெறுகின்றது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வுலி. கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மீளக்குடியமர்ந்த விவசாயிகளுக்கு போரூட் நிறுவனத்தின் அனுசரணையுடன் நீரிறைக்கும் இயந்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்... போரூட் நிறுவனம் அண்மையில் 28 இரண்டு சில்லு உழவு இயந்திரங்களை மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஊடாக அச்சுவேலியில் வைத்து வழங்கியிருந்ததுடன் இன்றும் 71 நீர் இறைக்கும் இயந்திரங்களையும் வழங்குகின்றது.
இவ்வாறு கிடைக்கப் பெறுகின்றவற்றை சரியான முறையில் பயன்படுத்துவதுடன் அவற்றின் மூலம் உயரிய பயன்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கிணற்றிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு பல்வேறு நவீன முறைகள் கையாளப்படுகின்றன.
கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசு பெரு முயற்சியுடன் ஈடுபட்டு வருகின்றது.
இங்கு வழங்கப்படுகின்ற நீர் இறைக்கும் இயந்திரங்களையோ அது சார்ந்த பொருட்களையோ விற்பனை செய்யக்கூடாது என்பது முக்கியமானது என்பதுடன் அது மாபெரும் குற்றமுமாகும்.
ஆனால், சக மனிதனை மதித்து அவனது தேவையை உணர்ந்து அவனுக்கு உதவும் பொருட்டு இவைகளைப் பாவிக்கலாம். ஒருவனுக்கு ஒருவன் உதவி புரிந்து வாழுகின்றபோதே அவன் முழுமையான மனிதனாக சமூகத்தில் வாழ முடியும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.
கோப்பாய் பிரதேச செயலர் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரூட் நிறுவன இணைப்பாளர் திருமதி சுமதி தனபாலசிங்கமும் உரையாற்றினார்.
தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 71 பயனாளிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி.யின் கோப்பாய் பிரதேச பொறுப்பாளர் ஐங்கரன், ஈ.பி.டி.பி.யின். அச்சுவேலி பிரதேச பொறுப்பாளர் தர்மராஜா உட்பட பெருமளவிலான பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025