2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்தில் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு சைக்கிள்களும் சப்பாத்துகளும் அன்பளிப்பு

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 25 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு 20 சைக்கிள்களையும் 500 சப்பாத்துகளையும் வடமாகாண ஆளுநர் ஜெனரல் சந்திரசிறி வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் பணிமனையில் நடைபெற்றது.

இதன்போது உரும்பிராய், நாவாந்துறை, கொழும்புத்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20 மாணவர்களுக்குச் சைக்கிள்களும் 500 பேருக்கு சப்பாத்துகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் மற்றும் யாழ். மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் உரும்பிராய் சைவப்பிரகாச வித்தியாசாலை, யாழ். புனித சவேரியார் பாடசாலை ஆகியவற்றின் அதிபர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X