A.P.Mathan / 2010 டிசெம்பர் 25 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். போதனா வைத்தியசாலையில் சீனாவின் நிதியுதவியுடன் ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அவசர சிகிச்சை, விபத்துச் சிகிச்சை ஆகிய பிரிவுகளுக்கு சீன அரசின் 775 மில்லியன் ரூபா செலவில் இக்கட்டடம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதமளவில் இக்கட்டடம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் எஸ்.சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். வைத்தியசாலையில் நவீன வசதிகளுடனான கட்டடம் ஒன்று, அவசர சிகிச்சைப் பிரிவு, விபத்துப் பிரிவுகளுக்கு இல்லாத நிலையால் நோயாளிகள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதுகுறித்து சீன அரசாங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து இச்சிகிச்சைப் பிரிவுகளுக்கு நவீன கட்டடம் அமைப்பதற்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025