2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். குடாநாட்டில் துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வீதிகள் புனரமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 26 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாண மாவட்டத்தில் துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், பல முக்கியமான வீதிகள் அடுத்த வருடம் புனரமைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இவ்வீதிகள் அனைத்தும் சீன நிறுவனங்களின் உதவியுடன் புனரமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இதற்கான வேலைகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இத்திட்டத்தில் 34 கிலோமீற்றர் நீளமான யாழ.;; பலாலி வீதி, 34 கிலோமீற்றர் நீளமான யாழ். பருத்தித்துறை வீதி, 13 கிலோமீற்றர் நீளமான புத்தூர் மீசாலை வீதி, 18 கிலோமீற்றர் நீளமான யாழ். காங்கேசன்துறை வீதி ஆகிய வீதிகள் 33 அடிக்கு அகலமாக்கப்பட்டு காப்பற் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியில் 11 கிலோமீற்றர் நீளமான வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. 2 கிலோமீற்றர் நீளமான சுண்டுக்குளி கொழும்புத்துறை வீதி, 3 கிலோமீற்றர் நீளமான கச்சேரி கடற்கரை வீதி, 3 கிலோமீற்றர் நீளமான சங்கிலியன் வீதி, செம்மணி வீதி, 2 கிலோமீற்றர் நீளமான ஒட்டுமடம் வீதியும் புனரமைக்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X