2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணப்படின் இனங்களிடையே ஒற்றுமை ஏற்படும் - டக்ளஸ்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 27 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணும் பட்சத்தில் இனங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படும் என்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் கலந்துகொண்டு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அமைச்சர், 'இன ஒற்றுமை ஏற்படுவதற்கு இனங்களுக்கிடையில் சமத்துவம் நிலவுவது அவசியமானது என்றும் எந்தளவுக்கு அதிகாரப் பகிர்வு  நிலவுகிறதோ, எந்தளவுக்கு பொருளாதார சமத்துவம் நிலவுகிறதோ அந்தளவுக்கு இனங்களுக்கிடையே ஒற்றுமையும் நிலவும்' என்றார்.

அத்தோடு 'தமிழ் மக்கள் இயற்கை அனர்த்தங்களினாலும், ஒருவரையொருவர் கொன்றழிக்கின்ற மனித நடவடிக்கைகளாலும் அவலங்களைச் சந்தித்துள்ளனர்.

ஏதாவது ஒரு வகையில் அழிவை ஏற்படுத்தி அதை வைத்து அரசியல் செய்யச் சிலர் எடுத்த முயற்சிகள் காரணமாகவே தமிழ் மக்கள் அதிகளவில் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்ததாகக்' குறிப்பிட்டார்.

வரும்போது காப்பது அல்லது வந்தபின் காப்பது என்றில்லாமல், வருமுன் காக்கும் விதமாக சம்பந்தப்பட்ட தமிழ் அரசியல் தலைமைகள் முன்பு செயற்பட்டிருந்தால் தமிழ் மக்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது' என்று கூறினார்.

போட்டி அரசியலுக்காக நான் இதைக் கூறவில்லை. இனியும் தவறு நேர்ந்துவிடக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடனே இதைக் கூறுகிறேன் என்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X