2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். மாணவர்களுக்கு வட மாகாண ஆளுநரிடமிருந்து பரிசுப் பொருட்கள்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 27 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பாடசாலை மாணவர்களுக்கான சப்பாத்துக்கள் மற்றும் சைக்கிள்களை கையளிக்கும் நிகழ்வு வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் இடம்பெற்றது. வறிய குடும்பங்களைச் சேர்ந்த 210 மாணவ மாணவியருக்கு இதன்போது சப்பாத்துக்களும் சைக்கிள்களும் வழங்கப்பட்டன.

இந்நிலையில் யாழ். உரும்பிராய் இந்துக்கல்லூரி, புனித ஜேம்ஸ் மகளிர் கல்லூரி, புனித ஜேம்ஸ் ஆண்கள் கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி, நாவாந்துரை றோமன் கத்தோலிக்க கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கே மேற்படி சைக்கிள்களும் சப்பாத்துக்களும் வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆளுநரால் மாணவர்களுக்கு குறித்த பரிசுப் பொருட்கள் கையளிக்கப்படுவதை படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X