Menaka Mookandi / 2010 டிசெம்பர் 28 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்ட கோழிப்பண்ணையாளர்களுக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நல்லின கோழிக்குஞ்சுகள் வழங்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட கால்நடை அபிவிருத்தி மற்றும் சுகாதார உதவிப் பணிப்பாளர் திருமதி வத்சலா அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கோழிமுட்டைக்கு நிலவும் தட்டுப்பாட்டை நீக்கும் முகமாக அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து கோழிக்குஞ்சுகளை இறக்குமதி செய்து வரும் செயற்திட்டத்தில் யாழ்ப்பாண கோழி வளர்ப்ப பண்ணையாளருக்கும் இக்கோழிக்குஞ்சுகள் வழங்கப்படவுள்ளன.
கோழிக்குஞ்சுகள் தேவையானவர்கள் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதிக்கு முன்னர் முழுப்பணத்தையும் செலுத்தி பதிவுகளை யாழ். மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையில் மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025