2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மீள்குடியேற்ற கொடுப்பனவைக் கூட விட்டுவைக்காத வன்னி திருடர்கள்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 28 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வன்னியில் மீள்குடியமர்ந்த மக்களுக்கான கொடுப்பனவுகளைக் கூடத் திருடர்கள் விட்டுவைக்கவில்லையெனப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த 13ஆம் திகதி ஸ்கந்தபுரத்தைச் சேர்ந்த தியாகராசா அன்னலட்சுமி என்ற பெண் தங்களுக்கு மீள்குடியேற்றத்துக்காகக் கிடைக்கப்பெற்ற 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவை கிளிநொச்சி மக்கள் வங்கிக் கிளையில் பெற்று தனது கைப்பையினுள் வைத்துள்ளார்.

பின்னர் கிளிநொச்சி பஸ் தரிப்பு நிலையத்திற்குச் சென்று பார்த்தபோது பையில் வைக்கப்பட்ட பணம் மாயமாய் மறைந்திருந்த நிலையில் அவர் மிகுந்த கவலையடைந்துள்ளார்.

இடம்பெயர்ந்து பல இன்னல்களைச் சந்தித்து மீள்குடியமர்ந்த மக்களுக்கு மீள்குடியமர்ந்து பல மாதங்களின் பின்னரே மீள் குடியேற்றக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அதனைப் பெறுவதற்குக் கிராம அலுவலகம், பிரதேச செயலகம் எனப் பல இடங்களுக்கும் இந்த மக்கள் பலமுறை அலைந்து திரிந்து கொடுப்பனவுச் சீட்டுக்களைப் பெறுகின்றனர்.

பின்னர் வங்கிகளிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாறு பல நாள்கள் அலைந்து திரிந்து பெறப்பட்ட பணத்தை திருடர்கள் பறித்துச் செல்வதால் அம்மக்கள் பெரும் வேதனைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X