2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சுட்டுக்கொல்லப்பட்ட வலிகாமம் பிரதிக் கல்விப் பணிப்பாளரின் உறவினரிடம் அமைச்சர் டக்ளஸ் துக்கம் விசாரி

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 28 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுட்டுக்கொல்லப்பட்ட வலிகாமம் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கத்தின் வீட்டிற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சென்று துக்கம் விசாரித்துள்ளார்.

குறித்த பிரதிக் கல்விப் பணிப்பாளர், இனந்தெரியாதவர்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உரும்பிராயிலுள்ள அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பிரதிக் கல்விப் பணிப்பாளரின் உறவினர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், இக்கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.

இக்கொலை தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளை இனங்காண்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்ததுடன்,  எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடக்காதவாறு பொலிஸார் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X