2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வீட்டினுள் அத்துமீறி நுழைந்த நபரே மின்தாக்கி மரணம்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 30 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

இன்று அதிகாலை தெல்லிப்பளை பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபர், குறித்த வீட்டினுள் அத்துமீறி நுழைந்தவரென பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபருடன் மேலும் இருவரும் சேர்ந்து அத்துமீறி வீட்டினுள் நுழைய முற்பட்ட வேளையில் மின்சார வேலியில் சிக்குண்ட நபரே ஸ்தலத்தில் பலியாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பிச்சென்ற ஏனைய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மின்சார வேலி பொருத்திய வீட்டு உரிமையாளரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். பயிர்களை பன்றி நாசமாக்குவதால் அதனை தடுப்பதற்காகவே மின்சார வேலியினை பயன்படுத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் வீட்டு உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X