A.P.Mathan / 2011 ஜனவரி 01 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் அண்மைய நாள்களாகத் தொடரும் கொலை, கொள்ளைச் சம்பங்களைத் தடுக்க அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரும் தீர்மானம் நேற்று யாழ். மாநகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சம்பவங்கள் அனைத்துக்கும் அரசே பொறுப்பு என்றும் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
யாழ். மாநகர சபையின் இந்த ஆண்டுக்கான இறுதிக் கூட்டம் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் உரையாற்றிய அரச, எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் உரையாற்றும்போது, இங்கு இடம்பெறும் கொலைகள், கொள்ளைகளைக் கடுமையாகக் கண்டித்தனர்.
இறுதியில் அனைத்து உறுப்பினர்களதும் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
யாழ். மாவட்டத்தில் அண்மைக் காலமாகக் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முன்னாள் ஆயுதக் குழுக்களே காரணம் என்று யாழ். படைகளின் தளபதி கூறியுள்ளார்.
இந்தச் சம்பவங்களுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். சம்பவங்களைத் தடுத்து நிறுத்த அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொலைகள் குறித்த சபையின் கண்டனம் ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலருக்கும் உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும் - என்றுள்ளது.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025