2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வட மாகாணத்தில் மீளக் குடியேறுபவர்களுக்கு தன்னார்வ நிறுவனம் உதவி

A.P.Mathan   / 2011 ஜனவரி 01 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வட மாகாணத்தில் மீளக் குடியேறுபவர்களுக்காக 55 லட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசர உணவு வகைகளை வழங்க யு.எஸ்.எயிட் தன்னார்வ நிறுவனம் முன்வந்துள்ளது.

இந்நிறுவனம் சுமார் 6 ஆயிரத்து 740 மெற்றிக் தொன் கோதுமை மா மற்றும் தாவர எண்ணெய் உட்பட பல பொருட்களை வழங்கவுள்ளது.

இதன் மூலம் 3 லட்சம் பேர் வரையில் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பொருட்கள் மீள குடியமர்ந்தவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களாக ஆறு மாத காலப்பகுதிக்கு வழங்க முடியும் என யு.எஸ்.எயிட் அமைப்பின் பிரதிநிதி எட்னன் கான் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X