A.P.Mathan / 2011 ஜனவரி 01 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ், கிரிசன்)
வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் நேற்றிரவு வீட்டினுள் நுழைந்த ஆயுததாரிகள், தபால் ஊழியர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவத்தில் பருத்தித்துறை தபாலகப் பணியாளர் தவராசா கேதீஸ்வரன் (வயது 28) என்பவரே பலியாகியுள்ளார். இவர் தபாலகத்தில் தபால் ஊழியராக கடமையாற்றுவதுடன் மணல் வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்குள் சென்ற ஆயுததாரிகள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவரை அயலவர் உதவியுடன் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்போதும் சிகிச்சை பலனின்றி மரணமானார்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025