Super User / 2011 ஜனவரி 01 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
வட மாகாண சபையின் கீழுள்ள உத்தியோகஸ்தர்களுக்கான நியமனங்களை வழங்கும் வைபவம் இன்று சனிக்கிழமை கொழும்பிலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
உள்ளூராட்சி சபைகளுக்கான செயலாளர்கள் 10 பேருக்கும், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் 17 பேருக்கும், விளையாட்டுத்துறை பயிற்சியாளர்கள் 3 பேருக்கும், காணி உத்தியோகத்தர்கள் 11 பேருக்குமான நியமனங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் வழங்கி வைத்தனர்.
இந்த நியமனங்களை வெறுமனே பணியாக மாத்திரம் மேற்கொள்ளாமல், சமூக அக்கறையுடன் சமூகக் கடமையாகவும் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார்.
எப்போது, என்ன நடக்குமோ என்ற பதற்றத்துடன் கூடிய ஒரு காலம் கடந்து இப்போது சுமுகமானதொரு சூழ்நிலை நாட்டில் உருவாகி உள்ளது. இவ்வாறான சூழலை ஜனாதிபதி ஏற்படுத்தி தந்ததற்காக ஜனாதிபதிக்கு எமது மக்கள் சார்பாக தனது நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
34 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
7 hours ago