2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

செட்டிபுலம் மீன்சந்தை திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 04 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட செட்டிபுலம் மீன்சந்தையை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ.; மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் நேற்று திங்கட்கிழமை திறந்து வைத்துள்ளார்.

அப்பிரதேச மக்கள் விடுத்த கோரிக்கைக்கமைய  இச்சந்தை சமுர்த்தி வங்கி நிதி ஒதுக்கீட்டின் கீழ் 150,000 ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

செட்டிபுலம் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் விஸ்வலிங்கம் தலைமையில் இதற்கான திறப்பு விழா நடைபெற்றது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் க.கமலேந்திரன் கமல் அங்கு உரையாற்றுகையில்,

இன்றைய அரசியல் சூழ்நிலையில் நடைமுறைக்குச் சாத்தியமாகாத வாக்குறுதிகளை ஏனைய கட்சிகளைப் போன்று நாம் முன்வைக்கவில்லை. ஆளும் அரசாங்கத்துடன் பேசி எமது அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதே சிறந்த வழியாகும.;

அத்துடன், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் பிரதேச அபிவிருத்திக்காகவும் உழைப்பதே எமது கட்சியின்; கொள்கையாகும்.

ஆனால், முன்னைய அரசியல்வாதிகள் கொள்கையற்றவர்களாகவே அரசியலில் ஈடுபட்டனர். இதனால் தான் எமது மக்கள் அழிவுகளையும் இழப்புக்களையும் சந்தித்து நிர்க்கதியாகியுள்ளனர். அதே அரசியல்வாதிகள் இன்றும் கூட நடைமுறைக்குச் சாத்தியமற்ற விடயங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அன்று தொட்டு இன்று வரை நடைமுறைக்கு சாத்தியமான வழிமுறையில் நின்று எமது மக்களுக்கான அனைத்து விடயங்களிலும் அயராது சேவையாற்றி வருகின்றார்.

தற்போது எப்படியான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கப்பட்டு வருகிறதோ அதேவிதமான மேலும் பலவகையான அபிவிருத்தித் திட்டங்கள் இவ்வருடம் முன்னெடுக்கப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X