Suganthini Ratnam / 2011 ஜனவரி 04 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
வலிவடக்கு உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த வசாவிளான் கிழக்கு பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கை அடுத்த வாரம் நடைபெறுவதற்கான சாத்தியமுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
வலிவடக்கு, வசாவிளான் கிழக்கு பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்டமைக்கான சான்றிதழ் மாவட்ட செயலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்நிலையில், படைத் தளபதியுடன் கலந்துரையாடி இப்பகுதி மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவம் அவர் கூறினார்.
இதேவேளை, வசாவிளான் மகாவித்தியாலயம் 20 வருடங்களுக்குப் பின்னர் சொந்த இடத்தில் இயங்கி வருகிறது. இப்பகுதியிலேயே மீள்குடியேற்றம் இடம்பெறவுள்ளதாகவும் யாழ். அரச அதிபர் தெரிவித்தார்.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025