Menaka Mookandi / 2011 ஜனவரி 04 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
வலிகாமம் கல்வி வலயத்தில் கடமையாற்றிய 94 ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வட மாகாண கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்திற்க்கு அமைவாக வட மாகாண மாவட்டங்களுக்கு இடையேயான ஆசிரியர்களின் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இடமாற்றத்திற்கு அமைவாக வலிகாமம் கல்வி வலயத்திற்க்கு உட்பட்ட பாடசாலைகளில் இருந்து 31 ஆசிரியர்கள் ஏனைய மாவட்டங்களுக்க இடமாற்றம் பெற்றுள்ள போதிலும் 43 ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து இடமாற்றம் பெற்று வலிகாமம் கல்வி வலயத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்கள்.
இந்நிலையில் 45 வயதிற்கு உட்பட்ட வெளி மாவட்டங்களில் தமது சேவைகளை மேற்கொள்ளாத ஆசிரியர்களில் மேலும் 63 பேர் வலிகாமம் கல்வி வலயத்தில் இருந்து வெளி மாவட்டங்குளுக்கு இரண்டாம் கட்டமாக இடமாற்றம் பெறவள்ளார்கள்.
இதேவேளை யாழ் மாவட்ட கல்வி வலயங்களுக்கு இடையேயான இடமாற்றம் இடம்பெற்றுள்ளதுடன் வலயங்களுக்கு உட்பட்ட கோட்டங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு இடையேயான இடமாற்றமும் வலிகாமம் கல்வி வலயத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago