2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ். திருநெல்வேலியில் கொள்ளையரால் இளைஞர் குத்திக்கொலை

Super User   / 2011 ஜனவரி 05 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி,தாஸ்)

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் வீடு ஒன்றினுள் புகுந்த கொள்ளையர் குழுவினால்  இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தசாமி இருதயன் வயது 27 என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராவார். இவர்  வன்னியிலிருந்து இறுதி யுத்தத்தின் போது வெளியேறி, முகாமில் இருந்து பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தவர் ஆவார். அதன்பின்  யாழ். திருநெல்வேலியில் வசித்துவந்த வேளையிலேயே கொல்லப்பட்டுள்ளார்.

இவரது சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X