Menaka Mookandi / 2011 ஜனவரி 06 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், பொது மக்கள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கள் பொலிஸ் நிலையங்கள் ரீயாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யாழ் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதகாலத்தில் அதிகரித்துள்ள கடத்தல்கள், காணாமல் போதல், களவுகள், கொள்ளைகள் மற்றும் கொலைகள் உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்தவும் சந்தேக நபர்களை இனம்கண்டு அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாகவே இந்த சந்திப்புக்கள் நடத்தப்படவுள்ளன.
அந்தவகையில் பொது மக்கள் மற்றும் கிராம அலுவலர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள், கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்புகள் யாழப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கலந்துரையாடல்கள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவாவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் வரிசையில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டவர்களுக்கான சந்திப்புகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025