A.P.Mathan / 2011 ஜனவரி 06 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். கண்ணாதிட்டி வீதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இன்று மாலை இனந்தெரியாத விசமிகளால் தீயூட்டப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று மாலை 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார், மாநகர சபை தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கியிருந்தனர். தற்சமயம் தீயணைப்பு படையினர் தீயினை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இத்தீவிபத்தில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக அந்நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.
பொலிஸார் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
34 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
7 hours ago