2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கடந்தாண்டு பெருந்தொகையான பனம் விதைகள் நடுகை

A.P.Mathan   / 2011 ஜனவரி 06 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

இலங்கை பனை அபிவிருத்திச் சபையினால் 2010ஆம் ஆண்டு 10 இலட்சத்து 43 ஆயிரத்து 298 (1,043,298) பனம் விதைகள் நடுகை செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 778 பனம் விதைகளும், கற்பிட்டியில் 45 ஆயிரத்து 250 விதைகளும், கல்முனை 89 ஆயிரத்து 500 விதைகளும், முல்லைத்தீவில் 70 ஆயிரத்து 800 விதைகளும், கிளிநொச்சியில் 2 இலட்சத்து 11 ஆயிரத்து 500 விதைகளும், திருகோணமலையில 54 ஆயிரத்து 620 விதைகளும், வவுனியாவில் 61 ஆயிரம் விதைகளும், மட்டக்களப்பில் 92 ஆயிரத்து 850 விதைகளும், மன்னாரில் 1 இலட்சத்து 24 ஆயிரம் விதைகளும் நடுகைசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X