2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழில் மீளக்குடியமர்ந்த முஸ்லிம்களுக்காக விசேட நடமாடும் சேவை

A.P.Mathan   / 2011 ஜனவரி 06 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ். மாவட்டத்தில் மீளக் குடியமர்ந்த முஸ்லிம் மக்களுக்கான மீளக் குடியமர்வு மற்றும் பிரச்சினைகளை ஆராய்வது தொடர்பான நடமாடும் சேவை ஒன்று ஒஸ்மானியாக் கல்லூரியில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து புத்தளம் மற்றும் பிற மாவட்டங்களில் தங்கியிருந்து தற்போது மீளக் குடியமர்ந்துவரும் முஸ்லிம் மக்களின் மீள் குடியேறுவது தொடர்பாக அவர்களது பிரச்சினைகளையும், மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளை ஆராயும் முகமாக இந்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.

 

இந்தச் சேவையில் பிரதேச செயலகம், கல்வித் திணைக்களம், சுகாதார சேவைத் திணைக்களம், தேர்தல்கள் திணைக்களம், உள்ளூராட்சித் திணைக்களம், மாவட்ட புனர்வாழ்வுப் பகுதி, யாழ். மாநகரசபை, தேசிய சேமிப்பு வங்கி, ஆட்பதிவுத் திணைக்களம், காணித் திணைக்களம், சமூகசேவைத் திணைக்களம் போன்ற திணைக்களங்களின் அதிகாரிகள் சமூகமளிக்கவுள்ளனர்.

இந்தச் சேவையை மக்கள் தவறாது பெற்றுக்கொள்ளுமாறு யாழ். மாநகரசபை உறுப்பினர் மௌலவி சுபியான் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X