2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குடாநாட்டிலுள்ள சிறுவர் இல்லங்களில் திடீர் பரிசோதனை நடவடிக்கை - யாழ். அரச அதிபர்

A.P.Mathan   / 2011 ஜனவரி 06 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் உள்ள சிறுவர் இல்லங்களைத் திடீர் பரிசோதனை செய்வதற்கான மேற்பார்வைக் குழுக்களைச் சகல பிரதேச செயலகங்களிலும் அமைக்குமாறு யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அறிவித்துள்ளார்.

அதற்கமைய வடமராட்சி வடக்குப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுவர்களது நலனைக் கருத்திற் கொண்டு அவ் இல்லங்களின் தரத்தினை உயர்த்துவதற்காக அங்கு சென்று திடீர் பரிசோதனை நடாத்தப்படவுள்ளது.

வடமராட்சி வடக்குப் பிரதேச செயலர் இரா.வரதீஸ்வரன் தலைமையில் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து சிறுவர் இல்லங்களுக்குச் சென்று திடீர் பரிசோதனை நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் திடீர் பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X