A.P.Mathan / 2011 ஜனவரி 06 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தென்மராட்சி வலயக்கல்வி அலுவலக முறைசாராக் கல்விப் பிரிவினால் மட்டுவில் கமலாசனி வித்தியாலயம், மீசாலை விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கணினிப் பயிற்சியும், கைதடி கலைவாணி வித்தியாலயத்தில் ஆங்கில மொழிவிருத்திப் பயிற்சியும் நடத்தப்படவுள்ளன.
எனவே பாடசாலையைவிட்டு வெளியேறிய மாணவர்கள் க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ஆகியோர் குறிப்பிட்ட பாடசாலை அதிபர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்றுப் பூர்த்தி செய்து எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்பு விண்ணப்பிக்குமாறும், பொருத்தமான தகுதியுடைய போதனாசிரியர்களையும் குறிப்பிட்ட பாடசாலை அதிபர்களிடம் விண்ணப்பத்தைப் பெற்று மேற்குறிப்பிட்ட திகதிக்கு முன் விண்ணப்பிக்குமாறும் தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் கு.பிறேமகாந்தன் கேட்டுள்ளார்.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025