2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

குடாநாட்டு குற்றச்செயல்களை நிறுத்த உடன் ஏற்பாடு: பொலிஸ் மா அதிபர் உறுதி

Menaka Mookandi   / 2011 ஜனவரி 09 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடா நாட்டில் இடம்பெற்று வரும் கொலை, கொள்ளை மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரிய இன்று தெரிவித்தார்.

அத்துடன், யாழ். மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக எடுக்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் உறுதியளித்தார்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை நேற்று மேற்கொண்ட பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, பொதுமக்களின் பிரதிநிகளுடனான சந்திப்பின் போதே மேற்படி கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு யாழ். பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X