Suganthini Ratnam / 2011 ஜனவரி 17 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இலங்கையை ஆசிய நாடுகளின் மிகச் சிறந்த நாடாக மாற்றும் பொருட்டு அனைவரும் ஒன்றாக அணிதிரள வேண்டுமென வடபகுதி மக்களுக்கு தாம் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்
பூநகரி - சங்குப்பிட்டி பாலத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
கடந்த காலத்தில் பல அரசாங்கங்கள் இப்பாதையை திறப்பதற்காக முயற்சித்தது. எனினும,; அந்த முயற்சிகள் யாவும் பலனளிக்காது போனது. நாம் இதைச் செய்வோமென கூறினோம். அதையும் செய்துள்ளோம். வடமாகாணத்தின் அரசியல்வாதிகளைப் போலன்றி நாம் சொல்வதைச் செய்வதாகவும், செய்வதையே சொல்வதாகவும் உள்ளோம்.
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதற்கு எனது அரசு தயாராகவுள்ளது. தமிழ் மக்கள் எதனையெல்லாம் எதிர்பார்த்தார்களோ அதனை இந்த அரசு நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. தமிழ் மக்கள் எனது தேசத்தின் முக்கிய பங்காளிகள் ஆவர். ஆகவே அவர்களைப் புறந்தள்ளி எனது தீர்வுத்திட்டத்தை முன்வைக்கமாட்டேன். தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் எமது அரசு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது என்றார்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025