Suganthini Ratnam / 2011 ஜனவரி 17 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹேமந்த்)
வெளியீட்டுத்துறையை மேம்படுத்துதல் மற்றும் பதிப்புக் கலையை வளர்த்தெடுத்தல் தொடர்பான கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைந்திருக்கும் சிகரம் ஊடக இல்ல கேட்போர்கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இலங்கையில் தமிழ்மொழி மூலமான வெளியீடுகள் மற்றும் பதிப்பு நடவடிக்கைகளின் அவசியம் பற்றியும் பதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பிரச்சினைகள், வழிவகைகளைப் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலை சிகரம் ஊடக இல்லத்தின் பணிப்பாளர் திரு கோ.றுஷாங்கன் ஆரம்பித்து வைத்தார்.
தொடர்நது நடைபெற்ற கலந்துரையாடலில் பேராசிரியர் இரட்ணஜீவன் கூல், டொக்டர் நடேசன், எழுத்தாளர்கள் தெணியான், லெ.முருகபூபதி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், யோ.கர்ணன், கவிஞர்களான சோ.பத்மநாதன், சித்தாந்தன், கருணாகரன், தானா.விஷ்ணு, கலைமுகம் சஞ்சிகையின் ஆசிரியர் செல்மர் எமில், மறுபாதி வெளியீட்டகத்தினர் தவிர வெளியீட்டகத்தினர், விரிவுரையாளர் த.கலாமணி? ஆய்வாளர் நிலாந்தன், சி.ரமேஸ், பா.மகாலிங்கசிவம், டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் குகநாதன், இரங்கும் இல்லம் அமைப்பின் இணைப்பாளர் திரு. சிறிபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்ப் பதிப்பு முயற்சிகளில் இலங்கைக்கு இருந்த பங்களிப்பின் முக்கியத்தும் - ஆறுமுக நாவலர், சி. வை.தாமோதரம்பிள்ளை போன்றோர் முன்னெடுத்த பதிப்பாக்க முயற்சிகள் போருக்கு முன்னர் வரை ஓரளவு சிறப்பாக நடைபெற்று வந்தன. ஆனால் கடந்த 30 ஆண்டுகாலப் போர் பதிப்பு மற்றும் வெளியீட்டு நடவடிக்கைகளை முடக்கி விட்டது.
இப்போதிருக்கும் புதிய சூழலில் பதிப்பு மற்றும் வெளியீட்டு முயற்சிகளை திறம்படச் செய்வதற்கு புலம்பெயர் தமிழர்களும் இலங்கையில் இருக்கின்ற செயற்பாட்டாளர்களும் இணைந்து செயற்படலாம் என்று இக்கலந்துரையாடலில் பேசப்பட்டது.
இக்கலந்துரையாடலின்போது, விலங்குப் பண்ணை மற்றும் வண்ணாத்திகுளம் ஆகிய நாவல்களும் அறிமுகம் செய்யப்பட்டன.
.jpg)
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago