2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் காண்டாமணி பொருத்தி முடி வைக்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 20 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்கை அம்மன் ஆலயத்திற்;கு பிரித்தானியாவிலிருந்து எடுத்து வரப்பட்ட புதிய காண்டாமணி பொருத்தி முடி வைக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெறுகிறது.


1,300 கிலோ நிறையுடைய இக்காண்டாமணி  புதிய மணிக்கோபுரத்தில் பொருத்தப்பட்டு மணிக்கோபுரத்திற்கான கும்பாபிஷேகமும்  நடைபெறவுள்ளன.


இதனைத் தொடர்ந்து, தற்போது கோயிலில் நடைபெறும் ஆலய கும்பாபிஷேக நிகழ்வில் கோபுரம் உட்பட ஏனைய இடங்களுக்கு முடிவைக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளன.

இதேவேளை, தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்கை அம்மன் ஆலுயத்தில் மிருத் சங்கிரகணம் நிகழ்வுகள் ஆலயத்தின் பழமை வாய்ந்த அரச மரத்தடியில் ஆலய பிரதமகுரு சி.அகிலேஸ்வரக் குருக்களினால் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்டது.  ஆலயத்தின் கும்பாபிஷேகத்தையொட்டி இடம்பெறும் கிரியாகால நிகழ்வுகளின் ஓரங்கமாக இந்நிகழ்வு நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X