Super User / 2011 ஜனவரி 22 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக அதிகரித்துவரும் கொலைகள், கொள்ளைகள் போன்ற வன்முறைகளை கட்டுப்படுத்துவது குறித்த விசேட மாநாடொன்று இன்று காலை யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது.
யாழ் மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசி;ங்க, பிரதி பொலிஸ்மா அதிபர் சுசில் பெரேரா, யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் கருணாரட்ன, யாழ் மறைமாவட்ட ஆயர் அதி வண. தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார் மற்றும் பல்வேறு மதகுருமார், பிரதேச செயலாளர்கள், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் முதலானோர் இம்மாநாட்டில் கலந்துகொண்டதாக அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தமிழ் மிரர் இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.
குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக 24 மணித்தியாலமும் படையினர் மோட்டார் சைக்கிள் ரோந்து நடவடிக்கைகளை ஈடுபடவுள்ளதாக இங்கு உரையாற்றிய மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
தேர்தல் காலங்களில் வன்முறைகள் அதிகரித்தால் நகரப் பகுதிகளில் காவலரண்களில் சந்தேகத்திற்கிடமானவர்கள் மீது உடற்சோதனைகளும் மேற்கொள்ளப்படலாம் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக குறுகிய காலத்திற்கு இத்தகைய நடவடிக்கைகளுக்க பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.
இதனால் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படலாம் என்றபோதிலும் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இத்தகைய நடவடிக்கைகளை தாம் ஏற்றுக்கொள்வதாக யாழ் ஆயரும் அரசாங்க அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago