2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழில் பெண் அரச ஊழியர்கள் சேலை அணிந்துவர உத்தரவு

Super User   / 2011 ஜனவரி 25 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன், கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலகங்களில்  கடமையாற்றும் பெண் ஊழியர்கள் சேலை அணிந்தே கடமைக்கு வரவேண்டும் என யாழ் மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் பெண் ஊழியர்கள்  அலுவலக கடமை நேரங்களில் பாவாடை சட்டை, சுடிதார் என பல்வேறு உடைகளையும் அணிந்து வருகின்றனர்.

இதனால் அரச ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் வித்தியாசம் தெரியாதிருப்பதாலும் கலாசாரத்தைக் கருத்திற் கொண்டும் யாழ் மாவட்ட நிர்வாகச் சேவை கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

இந்த நடைமுறை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்ச்சியாக பிரதேச செயலகங்களுக்கு கடமைக்கு வரும் பெண் ஊழியாகள் சேலை அணிந்து வர வேண்டும் என பிரதேச செயலாளாகள் உதவி அரசாங்க அதிபர்களினால் ஊழியர்களுக்கு சுற்று நீருபம் மூலம் அரசாங்க அதிபரின் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X