Super User / 2011 ஜனவரி 27 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி, கிரிசன்)
யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ( United People's Freedom Alliance ) வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு கட்சியின் பெயர் தொடர்பான சர்ச்சையே காரணமாகும்.
யாழ் மாவட்டத்தின் 16 உள்ளுராட்சி சபைகளுக்கும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், இவ்வேட்பு மனுக்களில் கட்சியின் பெயர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என தமிழில் எழுதப்பட்டிருந்தது. எனினும் அவ்வாறான பெயரில் கட்சி பதிவு செய்யப்படவில்லை எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற பெயரிலேயே கட்சியொன்று இருப்பதாகவும் தெரிவித்து இவ்வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
இந்நிராகரிப்பு தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக ஐ.ம.சு.முன்னணியின் பங்காளிக் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.
'இதுவரை அனைத்து பிரச்சாரங்கள் அனைத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற பெயரையே பயன்படுத்தினோம். அந்த அடிப்படையிலேயே வேட்பு மனுக்களிலும் அப்பெயரைப் பயன்படுத்தினோம். இதனால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நாம் வழக்கு தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளோம்' என அவர் கூறினார்.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025