2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழில் களம் இறங்கும் கட்சிகளும் அவற்றின் சின்னங்களும்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 28 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடக்கின் உள்ளூராட்சித் தேர்தல் களத்தில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணிவரை  பல அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.

யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களைத் தவிர தற்போதைய நிலையில், களத்திலுள்ள எஞ்சிய அரசியல் கட்சிகளினதும் சுயேட்சைக் குழுக்களினதும் விபரங்களையும் அவற்றுக்கான தேர்தல் சின்னங்களையும் யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் நேற்று வியாழக்கிழமை மாலை அறிவித்துள்ளார்


இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சி வீட்டுச் சின்னத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்திலும்  நவ சம சமாயக் கட்சி மேசைச் சின்னத்திலும் மக்கள் விடுதலை முன்னணி மணிச் சின்னத்திலும் ஐக்கிய சோசலிசக் கட்சி முச்சக்கரவண்டிச் சின்னத்திலும் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபைக்குப் போட்டியிடும் குணபில்கம் மேகனகுமார் கணினிச் சின்னத்திலும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்குப் போட்டியிடும் கந்தையா கணேசராசன் ஆமப்பூட்டுச் சின்னத்திலும் சாவகச்சேரி பிரதேசசபைக்கு; போட்டியிடும் கந்தர் ஆறுமுகம் மான் சின்னத்திலும், சாவகச்சேரி நாகரசபைக்கு போட்டியிடும் அமரசேகரம் செல்வராசா அன்னாசிப்பழச் சின்னத்திலும்

பருத்தித்துறை நகரசபைக்குப் போட்டியிடும் வேலன் குணரத்தினம் றோஸ் அப்பிள் சின்னத்திலும் பருத்தித்துறை பிரதேசசபைக்குப் போட்டியிடும் துரையன் தங்கவேலாயுதம் மாம்பழம் சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாகவும் யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X