2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ். புங்குடுதீவுப் பகுதியில் திருடர் அட்டகாசம்; தாக்குதலில் தம்பதி காயம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 30 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். புங்குடுதீவுப் பகுதியிலுள்ள வீடொன்றில் திருடுவதற்காக சென்ற திருடர் குழு,    குறித்த வீட்டில் தங்க நகைகள் எதுவும் இல்லததால் வீட்டு உரிமையார்களை சரமாரியாக தாக்கிவிட்டு தலைமறைவாகிய சம்பவமொன்று நேற்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டுக்கு கத்தி மற்றும் பொல்லுகளுடன் சென்ற திருடர் குழு,  வீட்டு  உரிமையாளரை மிரட்டி தங்க நகைகளைத் தருமாறு கோரியுள்ளனர். குறித்த வீட்டு உரிமையாளர் தங்களிடம் நகைகள் எதுவும் இல்லையெனத் தெரிவித்தபோது, மேற்படி திருடர் குழு வீட்டு உரிமையாளர்களான தம்பதியினரை தாக்கிவிட்டு தலைமறைவாகியது.

தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் அவலக்குரல் எழுப்பியதும் திருடர் குழு தப்பிச் சென்றுள்ளது.

அதன் பின்னர் அயலவர்கள் உதவியுடன்  காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இத்தாக்குதலில் புங்குடுதீவு 6ஆம் வட்டாரம், ஆலடியைச் சேர்ந்த குடும்பஸ்தர்களான கே.சுவாமிநாதன்  அவரது மனைவி சு.வரதலட்சுமிதேவி ஆகியோரே காயமடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X